Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கொசு கடித்தால் தடித்து அரிப்பது ஏன் தெரியுமா?

கொசுக்களும் நம் வாழ்வில் இன்றியமையாத ஒன்றாக மாறி கொண்டுள்ளது.. இந்தக் கொசுவினால் பலவிதமான நோய்கள் பரவுவது உண்டு.. கொசு கடித்த உடன் நமக்கு முதலில் தோன்றுவது அரிப்புதான்.. இதனால் நாம் படாத பாடு படுவோம்..

     
இந்த அரிப்பு ஏன் வருகிறது எனத் தெரியுமா அதன் காரணங்களை இப்பொழுது பார்க்கலாம்
    
கொசு கடித்து இரத்தத்தை உறிஞ்சும் போது ரத்தம் உறையாமல் இருக்க அது ஒரு திரவத்தை நம் தோளில் துப்புகிறது.. அந்தத் திரவம் ஒரு அந்நியப் பொருள் அதனால் உடல் அதை ஏற்றுக் கொள்ளாமல் எதிர்க்கிறது..
 
அந்த ஒவ்வாமையின் விளைவுதான் அரிப்பு ஏற்படுதல் தோல் தடித்து போதல் கொசு கடித்ததும் நம் தோலில் உள்ள மாஸ்ட் செல்களிலிருந்து ஹிஸ்டமின் வெளிவருகிறது...
  
 ஹிஸ்டமின் வெளிவருவதை தொடர்ந்து பிளாஸ்மா வெளியேறுகிறது இதுதான் அரிப்பைத் தொடர்ந்து வரும் தடிப்புக்கு காரணம்..
 அண்டிஹிஸ்டமின் மாத்திரை உட்கொண்டு விட்டால் தடிப்பு மறைந்துவிடும்


Post a Comment

0 Comments