Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

தாகம் எப்போது ஏற்படுகிறது? தாகம் எடுப்பது எதனால்

"நீரின்றி அமையாது உலகு" என்பதற்கிணங்க நம்ம எல்லாருமே தண்ணி இல்லாம வாழவே முடியாது...
 குளிர்காலமாக இருக்கட்டும், வெயில் காலமாக இருக்கட்டும்  எல்லாருக்குமே இன்றியமையாத ஒன்று  தண்ணீர்தான்.. வெயில் காலங்களில் தாகம் அதிகமாக இருக்கும்.. எவ்வளவு தண்ணி அருந்தினாலும் நமக்கு தண்ணி குடிக்கணும் போலவே இருக்கும்... 

    
இந்த தாகம் ஏன் ஏற்படுது அதன் காரணத்தை இந்த பதிவில் பார்க்கலாம்
 
 உடலில் நீரின் சம அளவு குறையும்போது அந்த அளவை சரிக்கட்ட மூளை நமக்கு தெரிவிக்கும் உணர்வு தாகம் எடுத்தல் ஆகும்..
 மூளையின் கீழ்தளத்தில்
ஹைப்போ தலாமஸ் என்ற பகுதி இருக்கு... இங்கு உடல் நீர் சமநிலையை உணரும் உணர்வு வங்கிகள் இருக்கின்றன..

 
 நீர் சமநிலை குறையும்போது இந்த தாக மையம்  தூண்டப்பட்டு தாக உணர்வு ஏற்படுகிறது அதனால் நீரை அருந்த முன் வருகிறோம்..

  ஹைபோதலாமஸ் இன் தாக மையம் தூண்டப்படும்போது பிட்யூட்டரி சுரப்பிகள் தூண்டப்பட்டு
ஆண்டி டை யூரடிக் ஹார்மோன்(ADH) வெளிப்படுகிறது..
 
   இந்த ஹார்மோன் சிறுநீரகத்தில் உள்ள நெப்ரான்கள் மீது செயல்பட்டு அதிக நீர் சிறுநீர் மூலம் வெளியேறாமல்  தடுக்கிறது...

இந்த இரு காரணிகள் மூலம் உடலின் நீர் சமநிலைபாதுகாக்கப்படுகிறது... 

Post a Comment

0 Comments