Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

செம்பருத்தி பூவினை கொண்டு அழகை அதிகரிக்க சில குறிப்புக்கள்

செம்பருத்தி பூவின் ஆங்கிலப் பெயர். ‘ Hibiscus Rosa Sinensis ‘ என்பதாகும். சைனா ரோஸ் என்றும் அழைப்பார்கள். . இதன் இலையை மென்றால் வழ வழப்பாக இருக்கும். பூ நல்ல ரத்தச்சிகப்பாக – அழகாக இருக்கும். 

செம்பருத்தி மலரை ஆயூர்வேதம் கொண்டாடுகிறது. கூந்தல் தயாரிப்புகளிலும், இதய வலுவை தரும் லேகியங்களிலும் செம்பருத்தி பூ உள்ளது. சருமபராமரிப்புகளிலும் கூட செம்பருத்தி இடம்பெற்றுள்ளது. “தங்க புஷ்பம்”, என்று கொண்டாடுகிறது.

செம்பருத்தி, முடி பராமரிப்பு, அழகு பராமரிப்பில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருவதாக பலர் அறிந்திருந்த நிலையில்,தோல் பராமரிப்பிற்கும் இதனை பயன்படுத்தலா


செம்பருத்தி பொடி செய்முறை
     செம்பருத்தி முழு மலர்களை சூரிய ஒளியில் காயவைக்க வேண்டும். நான்கு நாளில் நன்கு காய்ந்துவிடும். பிறகு இதனை மிக்ஸியில் அரைத்து பொடி செய்து கொள்ளவும். இந்த பொடியை கூந்தல் வளர்ச்சிக்கும் உபயோகப்படுத்தலாம் 

தலை முடி பிரச்னையை எப்படி செம்பருத்தி பூ வைத்து சரிசெய்யலாம் அப்படினு முதல பார்ப்போம்
1      சுத்தமான தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயை சூடாக்கி அதில் செம்பருத்தி பொடியை போட்டு அடுப்பை அணைத்து விடவும். இந்த எண்ணெயை தலைக்கு தடவி வரலாம்.

2    கூந்தல் வளர்ச்சி தைலங்கள் அனைத்திலும் இதனை சேர்க்கலாம்.
3.தயிர், எலுமிச்சை சாறு உடன் இந்த பொடியை சேர்த்து தலையில் தேய்த்து குளிப்பது இளநரையை குறைக்கும்.

முகத்தின் பளபளப்பு அதிகரிக்க 
செம்பருத்தி பூ பொடி - 3 டீஸ்பூன்
பாசிபயறு மாவு - 3 டீஸ்பூன்
பால் - தேவைக்கு

இந்த மூன்றையும் நன்றாக கலந்து பேஸ்ட் போல் குழைத்து முகம், கழுத்து, கை, கால்கள் என்று அனைத்து இடங்களிலும் தேய்த்து 30 நிமிடங்கள் வரை ஊறவைக்கவும். பிறகு மிதமான நீரில் முகத்தை கழுவி வந்தால் முகத்தில் எண்ணெய் பசை நீங்கும். ஈரப்பதம் சீராக இருக்கும். சருமம் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

செம்பருத்தி பவுடர் கிடைக்கவில்லை என்றால், செம்பருத்தி பூவை, முதல் நாள் இரவே தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். மறுநாள் அதை பேஸ்ட் பதத்திற்கு அரைத்து பயன்படுத்தலாம்

முகப்பரு மற்றும் வறட்சி நீங்க
தேவையான பொருட்கள் 
1 செம்பருத்தி பூ மற்றும் 2 தேக்கரண்டி சுத்தமான செம்பருத்தி பவுடர்
1 தேக்கரண்டி தேன்
1/2 தேக்கரண்டி ஆலோ வேரா ஜெல்
செய்முறை
அந்த பேஸ்ட் அல்லது செம்பருத்தி பவுடர் உடன் தேன் மற்றும் ஆலோ வேராவை சேர்த்து, இந்த கலவையை நன்கு கலக்க வேண்டும்.
  இந்த பேஸ் மாஸ்க்கை முகம் முழுவதற்கும் தடவி, 20 நிமிடங்கள் உலர வைக்கவும். பின் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும்

   

Post a Comment

0 Comments