Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

முல்தானி மெட்டியை இப்படி பயன்படுத்தி பாருங்க


முல்தானி மெட்டி என்பது சருமத்திற்கு அழகை உண்டாகும் அற்புதமான பொருள் அழகு.. முல்தானி மெட்டி சருமத்தை சுத்தப்படுத்தும் இது ஒரு வகை களிமண் ஆகும்.

 முல்தானி மெட்டியில் மக்னீசியம், குவார்ட்ஸ், சிலிகா, இரும்பு, கால்சியம், கால்சைட் மற்றும் டாலமைட் உட்பட பல்வேறு கனிமங்கள் அடங்கி உள்ளது. இது சருமத்தில் உள்ள பருக்களையும், கசடுகளையும் நீக்கும்.

தூக்கமின்மை நீரிழிவு நோயை ஏற்படுத்தும் ?

முல்தானி மெட்டி அதிக அளவில் அடங்கியுள்ள ஃபேஸ் பேக்குகள் மற்றும் ஃபேஸ் மாஸ்க்குகளை பெருமளவில் பலரும் பயன்படுத்துகின்றனர். இது எல்லா வகையான சருமத்திற்கும் ஏற்றது.

பெரும்பாலான அழகு நிலையங்களில் கூட சரும நிறத்தை அதிகரிப்பதற்கு முல்தானி மெட்டி ஃபேஸ் பேக் தான் பரிந்துரைக்கப்படுகிறது. இத்தகைய முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்கை அழகு நிலையங்களுக்குச் சென்று போடுவதற்கு பதிலாக, அந்த பொடியை வீட்டில் உள்ள சில பொருட்களுடன் சேர்த்து மாஸ்க் போட்டு வந்தால், சரும நிறம் அதிகரிப்பதோடு, சரும பிரச்சனைகள் வராமலும் தடுக்கலாம்.

முகப்பரு  வராமல்  தடுக்க 

தேவையான  பொருட்கள் 

2டேபிள் ஸ்பூன் -- முல்தானி மெட்டி   1டேபிள்--ஸ்பூன் எலுமிச்சை சாறு 1டேபிள் டீஸ்பூன் --ரோஸ் வாட்டர்

செய்முறை:ஒரு பௌலில் 2டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி பொடியுடன், 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் அதை முகத்தில் தடவி, 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இந்த மாஸ்க்கை தொடர்ச்சியாக பயன்படுத்தும் போது, சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்கி, முகப்பரு வருவது தடுக்கப்படும்

கொலாஜென் உற்பத்தியை அதிகரித்து இளமையாக இருக்க உதவும் பூசணிக்காய் பேசியல்

கரும்புள்ளிகள் நீங்க:

தேவையான  பொருட்கள்

2டேபிள் ஸ்பூன் தக்காளி ஜூஸ்                2 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி            1 டீஸ்பூன் சந்தன பவுடர்                             p 1 டீஸ்பூன் மஞ்சள்

செய்முறை 

ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் தக்காளி ஜூஸ், 2 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி, 1 டீஸ்பூன் சந்தன பவுடர் மற்றும் 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். பின் அதை முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவுங்கள். இந்த மாஸ்க்கை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கி, முகம் பளிச்சென்று காணப்படும்.

குளிர்கால சரும பராமரிப்பு! வறண்ட சருமதிறக்கின குறிப்புக்கள்

சருமம் மென்மையாக 

தேவையான பொருட்கள் 

1 டேபிள் ஸ்பூன் பாதாம் பேஸ்ட்டு              1 டேபிள் ஸ்பூன் பால்                        1டேபிள் ஸ்பூன் முல்தானிமிட்டி 

செய்முறை 

ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் பாதாம் பேஸ்ட்டுடன், 1 டேபிள் ஸ்பூன் பால் மற்றும் சிறிது முல்தானி மெட்டி பொடி சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் முகத்தை நீரால் கழுவி, தயாரித்து வைத்துள்ள கலவையை முகத்தில் தடவி காய்ந்த பின், நீரால் கழுவுங்கள். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்தால், சருமம் மென்மையாக இருக்கும்

 தழும்புகள் மறைய                 

தேவையான பொருட்கள்                           2ஸ்பூன் முல்தானி மெட்டி,               2ஸ்பூன் காரட் பல்ப்                தேவையான அளவு  ஆலிவ் ஆயில் 

செய்முறை 

முல்தானி மெட்டி, காரட் பல்ப் மற்றும் ஆலிவ் எண்ணெய்யை சரிசமமான அளவில் கலந்திடவும். இந்த கலவையை தழும்பு உள்ள இடத்தில் தடவுங்கள்.20 நிமிடங்கள் அதை அப்படியே விட்டு விட்டு, பின்பு கழுவிடுங்கள்.இதனை வாரம் ஒரு முறை அல்லது மூன்று முறை செய்து வந்தால் தழும்புகள் மெல்ல நீங்கும்

இந்தியாவின் மிகப்பெரிய நூலகம் பற்றி சிறு தகவல்கள்






Post a Comment

0 Comments