Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

உச்சி முதல் நகம் வரை உதவும் வைட்டமின் இ மாத்திரை

முகம், கை, கால் , கூந்தல் என்று அனைத்துக்கும் ஆரோக்கியம் தரும் சிறந்த களஞ்சியமாக இருக்கிறது வைட்டமின் இ ஆயில். இதில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் கூந்தலுக்கும், சருமத்துக்கும் பலவிதமான நன்மைகளைத் தருகிறது. எல்லா வகையான சருமத்துக்கும் ஏற்ற பராமரிப்பை தருவதில் வைட்டமின் இ பெரும்பங்கு வகிக்கிறது.. 
கூந்தல் பிரச்சனையை சரிசெய்ய 
     கூந்தலில்  வறட்சி  இருந்தாலே முடி வளர்ச்சி அதிகமா பாதிக்கப்படும். கூந்தலில் உண்டாகும் வறட்சி, எண்ணெய்பசை, பொடுகு, முடி உதிர்வு, முடி மெலிவு, நுனி வெடிப்பு இப்படி அனைத்து பிரச்னையும்  சரிசெய்கிறது.. வைட்டமின் இ மாத்திரையை எப்படி  பயன்படுத்தலாம்  அப்படினு  பார்க்கலாம். 
  
பயன்படுத்தும்  முறை
  வைட்டமின் இ ஆயில் மாத்திரை- 5 (உங்கள் கூந்தலின் நீளத்தை பொறுத்து இதன் எண்ணிக்கையை அதிகரிக்கவோ குறைக்கவோ செய்யுங்கள்)வழக்கமாக கூந்தலுக்கு பயன்படுத்தும் எண்ணெய் - 5 டீஸ்பூன் வைட்டமின் இ ஆயில் மாத்திரையிலிருந்து எண்ணெயை பிரித்து எடுத்து  இந்த எண்ணெயுடன் நீங்கள் தலைக்கு பயன்படுத்தும் எண்ணெயை சேர்த்து நன்றாக கலக்கவும். கூந்தலின் ஸ்கால்ப் பகுதியில் இலேசாக அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்யவும். கூந்தல் முழுக்க ஸ்கால் பகுதியில் மசாஜ்பண்ணனுங்க அப்படியே முடிநுனிவரை தடவி2 மணி நேரம் ஊறவிடவும். பிறகு ஷாம்பு கொண்டு கூந்தலை அலசிடுங்க.வாரத்துக்கு இரண்டு நாட்கள் இதை செய்துவந்தால் கூந்தலின் மாற்றத்தை பார்க்கமுடியும். கூந்தல் வளர்ச்சியும் அதிகரிக்கும்.    
சருமத்தின் முதுமை குறைய 
  பயன்படுத்தும்  முறை 
         வைட்டமின் இ ஆயிலை  முகத்துக்கு மசாஜ் செய்வதன் மூலம் சரும சுருக்கத்தை குறைக்க முடியும்.  முகத்தில் நெற்றி, கன்னம், தாடை பகுதியில் வட்ட வடிவமாக மசாஜ் செய்து உள்ளங்கைகளால் முகம் முழுக்க மசாஜ் செய்வதன் மூலம் சுருக்கங்களை தடுக்கலாம். 

 தளர்ந்த சருமங்கள் விரைவிலேயே அதிக வயதை காண்பிக்கும்.இவை மேலும் அதிகரிக்காமல் இருக்க வைட்டமின் இ ஆயில் உதவுகிறது. இவை சருமத்தை இறுக்கமாக்கி ரத்த ஓட்டத்தை அதிகரித்து முகத்தை புத்துணர்ச்சியாக இளமையாக வைக்க உதவுகிறது

கருவளையம் போக 
     கண்களை சுற்றி வரும்  கருவளையத்தால் கண்களை சுற்றி கருப்பு நிறமும் அதைத்தொடர்ந்து சுருக்கங்களும் வருகிறது. இந்த கருவளையத்தோடு கருமை நிறமும் சுருக்கமும் மறைய விரும்பினால் தினமும் இரவு தூங்கும் போது வைட்டமின் இ ஆயிலை கண்களை சுற்றி தடவி இலேசாக மசாஜ் செய்யுங்க அப்படி செஞ்சா கருவளையம் குறைய ஆரம்பிக்கும் 

புருவங்கள்  அடர்த்தியாக 
     புருவங்களின் மீது தடவிவிட்டால் மெலிந்த புருவம் அடர்த்தியாகும். கண்களின் மேக் அப் தாண்டி புருவங்களில் ஒரு பளபளப்பை கொடுக்கவும் செய்யும்.

நகங்களுக்கு பொலிவூட்ட 
    நகங்களை சுற்றி விரல்களை சுற்றியும் தோல் உரிதல், கருமை அடைதல் போன்றவை தனியாக தெரியும்.  மேலும் ஓயாமல் கைகளுக்கு வேலை கொடுப்பவர்களின் நகங்கள் சற்று வலிமை குறைந்து அழகின்றி நிறம் மங்கி இருக்கும். இதை மாற்றகூடிய வலிமை வைட்டமின் இ ஆயிலுக்கு உண்டு. 
பயன்படுத்தும்  முறை 
இரவு தூங்கும் போது வைட்டமின் இ ஆயிலை எடுத்து நகங்களை சுற்றியும், விரல்களை சுற்றியும் இலேசாக வட்ட வடிவில் மசாஜ் செய்ய வேண்டும்.கை நகங்களுக்கும் கால் நகங்களுக்கும் செய்யலாம். இப்படி செய்தால் நகங்கள் பளிச் வெண்மை நிறத்தோடு வலிமையாகவும் இருக்கும். நீங்கள் நகம் வளர்க்க விரும்பினால் இவை சரியான சாய்ஸ் ஆக இருக்கும். 


வைட்டமின் இ மாத்திரையை  எல்லாவகையானா பேஸ் பேக்லையும்  பயன்படுத்தலாம் 

Post a Comment

0 Comments