Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

எலுமிச்சை எடுத்து கொள்வதனால் வரும் பக்க விளைவுகள்




  
சருமத்தை வறட்சியாக்கும்:
எலுமிச்சை சாற்றை முகத்தில் தேய்க்கும் போது முகத்தில் உள்ள எண்ணெய் சிசுக்களை நீக்குவதால் வறட்சியான அல்லது எண்ணெய் பிசுக்கு குறைவான சருமத்தில் தேய்க்கும் போது அது சருமத்தை மேலும் வறட்சியாக்கும். வறண்ட சருமதுக்கு எலுமிச்சை சிறந்தது இல்லை..

வயிற்று எரிச்சலை உண்டுபன்னும் 
.ஜீரண சக்தியை அதிகரிக்கும்.எலுமிச்சை மலச்சிக்கலைப் போக்கும்..அதிக அளவில் எலுமிச்சை சாற்றை குடித்தால் வயிற்றை மந்தமாக்கும் அதுமட்டும் அல்லாமல் வயிற்று எரிச்சலை உண்டாக்கும்.


பற்களில் கூச்சத்தை ஏற்படுத்தும் 
பல் மற்றும் ஈறுகளில் உண்டாகும் வலியைக் குணப்படுத்த எலுமிச்சை சாறு உப்பும் சேர்த்து பயன்படுத்துவதுண்டு.அதிக அளவில் எலுமிச்சை சாற்றை பயன்படுத்தினால் அதுவே பல் கூச்சத்தை ஏற்படுத்த காரணமாகிவிடும்
 
 
நெஞ்சிஎரிச்சலை உண்டாக்கும்:
எலுமிச்சை சாறு வயிறு உபாதைகளை தீர்க்கும்... அதில் சிட்ரிக் அமிலம் இருப்பதனால் அதிகமாக பயன்படுத்தும் போது நெஞ்சிஎரிச்சலை உண்டாக்கி விடும்.

வாய் புண் 
       வாய்ப்புண் இருப்பவர்கள்  எலுமிச்சை சாப்பிடுவதைக் தவிர்க்க வேண்டும் .. அதில் சிட்ரிக் அமிலம் இருப்பதனால் எரிச்சல் மற்றும் வீக்கம் பிரச்சனையை மேலும் அதிக படுத்தும்
அமிலத்தன்மை 
அமிலத்தன்மை உள்ளவர்கள்  எலுமிச்சை நீரை உட்கொள்ள விரும்பினால், வெதுவெதுப்பானதாகத் தண்ணீரில் எலுமிச்சை பிழிந்த பிறகு, தேனையும் சேர்த்து சாப்பிடலாம்.. வெறும் வயிற்றில் உட்கொள்ள கூடாது..

Post a Comment

0 Comments