Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இரண்டு வகை pcod பிரச்சனைகளுக்கான நிரந்தர தீர்வு..


இன்றைக்கு பெண் மலட்டுத்தன்மைக்கு முக்கிய காரணமாக இருப்பது இந்த பிசிஓடி தான்

 இன்றைய காலகட்டத்தில் டீன் ஏஜ் பெண் களிடம் பெரும் பிரச்சனையாக  காணப்படுவது பிசிஓடி தான்

 ஒரு பெண்ணின் சினைப் பையிலிருந்து அதிக அளவில் பெண் ஹார்மோனானஈஸ்ட்ரோஜனும் சிறிதளவில் ஆண் ஹார்மோனான ஆண்ட்ரோஜனும் சுரக்கிறது.இவ்வாறு இந்த இரண்டு ஹார்மோன்கள் சுரப்பதனால் பிசிஓடி உருவாகிறது. இதன் காரணமாக   பெண் மலட்டு தன்மை உருவாகிறது..

 இந்த பிசிஓடி பிரச்சனையை மருந்துகளை கொண்டு சரி பண்ண முடியாது.. நம்மளோட முறையானஉணவு.. கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி மூலமாக மட்டுமே சரி செய்ய முடியும்.. மாத்திரைகள் மருந்துகள் ஒரு தற்காலிக தீர்வாக மட்டுமே இருக்கும். நிரந்தரத் தீர்வாகாது மாறாது. நம்முடைய பழக்க வழக்கங்கள் மூலமாக மட்டும்தான் pcod யை சரிசெய்யலாம்...

 பிசிஓடி பிரச்சனையில் இரண்டு விதம் இருக்கு..
1. Obese pcod
2.lean pcod
 100 ல் 90 பேருக்கு  obese pcod (எடை அதிகம் உள்ள pcod ) தான் இருக்கு.
 மீதி 10 பேருக்கு மட்டும்தான் உடல் மெலிந்த பிசிஓடி(lean pcod)இருக்கு..

 உடல் எடை அதிகம் உள்ள pcod பெண்களுக்கான டயட்
 1.இந்த பிரச்சனை உள்ள பெண்கள் முதலில் சரிசெய்ய வேண்டியது அவங்களோட பிஎம்ஐ அதான். அவங்க உயரத்துக்கு ஏற்ற எடையை சரி செய்ய வேண்டும்.

2. இன்சுலின் அதிகமாக இருப்பதால் சரியாக வேலை செய்யாமல் இருப்பதுதான் பிசிஓடி ஒரு முக்கிய காரணமாக இருக்கு..
 ஆகையால் நம்ம இன்சுலின் அளவை கட்டுக்குள் வைத்திருந்தால் இந்தப் பிரச்சனையில் இருந்து வெளியில் வரலாம்..
  அதற்கு நாம் செய்யவேண்டியது கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ள காய்கறிகளையும் நல்ல கொழுப்பு சத்து  கொழுப்பு சத்து கொண்ட உணவுகளை உட்கொள்ள வேண்டும்.. கொழுப்பில் நல்ல கொழுப்பு,  கெட்ட கொழுப்பு இரண்டு வகை கொழுப்பு இருக்கு.. ஆகையால் நல்ல கொழுப்பு உள்ள உணவுகளை தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும்

3. உடற்பயிற்சி தினமும் செய்வதால் நமது எடை கட்டுக்குள் இருக்கும்.. எடை குறைய ஆரம்பிக்கும் போது இன்சுலின் சரியாக வேலை செய்யும்.இப்போது இன்சுலின் சரியாக வேலை செய்வதால் சினை முட்டையிலிருந்து கருமுட்டை சரியாக வெளிவரும் இதனால் மலட்டுத் தன்மை குறையும் 

4. இவ்வாறு உடல் எடை குறைய ஆரம்பிக்கும் போது நமது உடலில் தேவையில்லாத கொழுப்புக்கள் கரைந்து ஊளை சதை சேராது.. இதனால் தேவையில்லாத ஹார்மோன்கள் குறைக்கப்படும்

5. Pcod இருக்கும் பெண்களுக்கு மெட்பராமின் (metformin) மருந்து வழங்கப்படும். இந்த மருந்தின் வேலை இன்சுலின் அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பது தான். இந்த மருந்துதான் நீரிழிவுநோய் உள்ளவர்களுக்கும்  பரிந்துரைக்கப்படும்..

6. உடல் எடை அதிகம் கொண்ட பெண்கள் எடை குறையும் காலத்தில் பால் குடிப்பதை தவிர்ப்பது நல்லது.. அதே நேரத்தில் குறை மாவு நிறை கொழுப்பு கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது..

7.. ஜங்க் ஃபுட், எண்ணெயில் அதிகம் வறுக்கப்பட்ட உணவுகள், குளிர்பானங்கள் போன்றவற்றை தவிர்ப்பது மிகவும் நல்லது

8. ஒமேகா-3 அதிகம் கொண்ட மீன்கள், முட்டை, கறி, காய்கறிகள், பழங்கள், கொட்டைகள் போன்ற  உணவுகளை மேற்கொள்வது நல்லது..

Lean pcod உள்ள பெண்களுக்கான டயட் 
 இவர்கள் தங்கள் எடையை அப்படியே மெயின்டெய்ன் செய்ய தேவைக்கேற்ற மாவு சத்து கஞ்சி,வடிக்கப்பட்ட சாதம், காய்கறிகள், பழங்கள், கீரைகள் போன்றவற்றை நன்கு உண்ண வேண்டும்

 40 நிமிடம் உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி செய்ய வேண்டும்

 மருத்துவர்களின் ஆலோசனைப்படி மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.Pcod இருக்கும் பெண்களுக்கு மெட்பராமின் (metformin) மருந்து வழங்கப்படும்

 இந்த இரண்டு வகை பிசிஓடி உள்ள பெண்களுக்கும் வைட்டமின் டி என்பது மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது

 விட்டமின் டி யை பெறுவது மிகவும் எளிமையான ஒன்று அவரவர் வீட்டு மொட்டை மாடியில் 15 நிமிடம் என்றாலே விட்டமின் டி நாம் பெற்றுவிடலாம்..

 பிசிஓடி என்பது மிகவும் எளிமையாக சரி செய்யக் கூடிய பெண் மலட்டுத்தன்மை நோயாகும்.. இது சிறந்த உணவு முறை மற்றும் உடற்பயிற்சி முறை மூலம் சரி செய்யலாம். குறை மாவு உணவு முறை(லோ carbhohydrate)இதற்கு சிறந்த தீர்வாக அமைகிறது...

Post a Comment

0 Comments