Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

வாய் மற்றும் ஈருகளின் பிரச்சனையில் இருந்து வெளிவர...

வாயில் புண், பல் சம்பந்தப்பட்ட நோய், உடலில் ஏதேனும் பாதிப்புகள், சூடான தண்ணீரைக் குடிப்பது, வெயில் கால உஷ்ணம், உங்கள் உடலுக்கு ஒவ்வாத சில வகை மாத்திரைகளை உட்கொள்வது போன்ற காரணங்களால் வாயில் ரத்தம் வர வாய்ப்பு உள்ளது. பல் துலக்கப் பயன்படுத்தும் பிரஷ்கூட காரணமாக இருக்கலாம்..

ஈறுகளில் வீக்கம் மற்றும் இரத்தம் வடிதல்:
பல் துலக்கும்போது ஈறுகளில் ரத்தம் வருவது இந்த நோயின்  நோயின் முதல் அறிகுறி.
ஈறுகளிலும் அவற்றின் அடியிலிருக்கும் எலும்புகளிலும் தொற்று நோய்க் கிருமிகளின் தாக்குதல் இருந்தால்,  
 ஈறுகளில்  இரத்தம்  வருகிறது..
டிப்ஸ்
தினமும் பற்களைச் சுத்தமாக துலக்குவதும், பற்காரைகள் வராமல் பாதுகாப்பதும் அவசியம். ஆன்ட்டி பாக்டீரியல் கொண்ட மவுத் வாஷ் கொண்டு வாய் கொப்பளிப்பது   இதற்கு நல்ல தீர்வாகும்..

வாய்  உலர்ந்து போவது:
அதிகப்படியாக வியர்ப்பது மற்றும் நீரிழிவு நோயும்கூட வாய் உலர்ந்து போவதற்கு காரணமாகும்..உடலின் போதுமான நீர்ச்சத்து குறைவதனாலும் உடலில் அதிகப்படியான நீர் வெளியேறுவதாலும் வாய் உலர்ந்து போகிறது... 

சரிசெய்யும் முறை 
  நிறைய தண்ணீர்  எடுத்துக் கொள்ளவேண்டும். தினமும் குறைந்தது ஒன்றரைலிட்டர்  அருந்துவது அவசியம்.  பழங்களையோ பழச்சாறோ அருந்துதலும் நல்ல பலன் தரும்.. வைட்டமின் சி நல்ல பலன் தரும்..

 

Post a Comment

0 Comments